
“தமிழகத்தின் பால் தாக்கரே” சீமான்
May 25, 2011இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்லுகிறேன்? என்று இன்று கோபித்து கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்து பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம்” என்பதை தவிர அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குபடியே சிந்தித்தாலும் ‘தமிழ்மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை தமிழின் பெருமைக்கு சாதனமாக கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கிய காரணமாய் சொல்லுகிறேன். – அய்யா தந்தை பெரியார்
அனைத்து இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம், அனைத்து இந்திய அந்த சங்கம் இந்த சங்கம் என்று இருக்கும். அதில் எல்லாம் மாநிலம், மாவட்டம், மாநகரம் என்று ஒவ்வொரு குழு அடங்கும். அது போல தேவர் குழு, செட்டியார் குழு, முதலியார் குழு, நாடார் குழு, பிள்ளை குழு என்று எல்லாம் சேர்ந்து நாம் தமிழர் என்று ஒரு சங்கம் அமைத்து உள்ளது. சரி எதுக்கு இந்த சங்கமுன்னு கேட்டா எல்லாரையும் ஒன்று இன்னைத்த பிறகு எல்லாருக்கும் அறிவுரை கூறி ஜாதி பற்றை அல்லது வெறியை கைவிட செஞ்சுடுவாங்கலாம். ‘இவன்’ என்ற பார்த்திபன் படம் நினைவுக்கு வருது. அதுல மிஸ்டர் பார்த்திபன் என்ன செய்வாருன்னா எல்லா வில்லன்களை கடத்தி பேசியே திறித்திடுவாறு. நல்ல தமாஷா இருக்கும். அதே வித்தையை நம்ம தன்மான சிங்..ச்சி புலி சீமான் செஞ்சினு இருக்காறு. ஏதோ அவவன் தேவை இல்லாம தேவனாகவும், வெட்டியா வன்னியனாகவும், சும்மனாச்சுக்கும் செட்டியாகவும், டைம் பாஸ்சுக்கு தலித் ஆகவும் இருக்கான் ரெண்டு நல்ல வார்த்தை சொல்லி திறுதருதற்கு. இந்த கூத்துக்கு பின்னாடி ஒரு கூம்பல் வாங்க தமிழரே கொள்கை தேவையில்லை, கூட்டம் தான் தேவை, கட்சி தான் தேவை. வீரம் தான் தேவை என்று இயேசு அழைக்கிறார் கும்பல் கூச்சப்படும் அளவிற்கு சகட்டு மேனிக்கு பிரச்சாரம் செய்கிறார்கள். எல்லா ஜாதிக்காரனும் (சுத்ரவாள்) செந்துக்குன்னு தலித் மக்களை வேற வாங்க தமிழரே என்று தீடீர் பாசம் செலுத்துறான்(ராம ஜன்மபூமி நினைவிற்கு வருது). சும்மா வாங்க பிரச்சனைய அப்புறம் பார்த்துப்போம் என்று எத கேட்டாலும் இப்போ ஈழம் தான் ஒரே பிரச்சனைன்னு ஜார்ஜ் புஷ் 9/11 போல அரச்ச மாவையே அரைக்கிறான். ஈழ போர் ஏன் இப்படி ஆச்சின்னு மட்டும் கேட்டோம் காங்கிரஸ், சோனியா, கருணாநிதி, இளங்கோவன், அசின், விவேக் ஒபரோய் என்று எல்லாரையும் இழுத்து ஒரு கலட்சபம் நடத்திடுவாங்க. சரி இப்ப என்ன செய்யலாம் என்றால் அ.தி.மு.க விற்கு வோட்டு , கனிமொழிக்கு சிறை, மோடி போன்ற ஆட்சி என்று தே.மு.தி.க வின் அடிமட்ட தொண்டனுக்கு உள்ள அரசியல் சமூக அறிவை வியக்கும் அளவிற்கு பேசுவார்கள்.
தேசியவாதம் அயோக்கியனின் உறைவிடம். எப்படி இந்திய தேசியத்திற்கு கண்மூடித்தனமாய் ஒரு பாகிஸ்தான் தேவைப்படுகிறதோ அதே போல் தமிழ் தேசியத்திற்கு சிங்களம் தேவைப்படுகிறது. சிங்களம் இல்ல விட்டால் வேறு ஒரு தேசியம் எதிரியாக சித்தரிக்கபடும். ராஜபக்சேவும் சிங்கள இனவாதிகளும் எதை எதிர்பார்க்கிறகளோ அதையே இவர்களும் செய்கிறார்கள். கார்கில் பொழுது நம்ப அம்பி அரவிந்த்சாமி ஒரு விளம்பரத்துல சொல்லுவாறு ‘இந்துஸ்தானம் எழுந்தால் எந்த ஸ்தனமும் மிஞ்சாது’ அதே போல் நம்ம சுத்திர குட்டி சீமான் சிங்களவனை அழிச்சிடிவோம் என்று உதார் விடறாரு. பாமர சிங்கள மக்களை இதை சொல்லியே பயமுருத்திவிடுவார்கள் சிங்கள குண்டர்கள்.
எதோ தேசியவாதம் ஜாதி நல்லிணக்கம் பேசுறீங்க சரி, பெரியாரை ஏன் சீண்டனும். பெரியார் தேசியத்தை வெறுத்தவர், ஜாதி ஒழிப்பில் காலமெல்லாம் உறுதியாய் இருந்தவர், பார்பனீயம் அல்லது இந்து மதத்தை வேரறுக்க முற்பட்டவர், அடிப்படைவாதத்தை எதிர்த்தவர் என்று எதையெல்லாம் செய்தாரோ அதற்கு நேர் மாறாக செயல் படுகிறது சீமானின் நாம் தமிழர். வீரமணி பெரியார் பெயரை கெடுத்தது பத்தாது என்று இன்று சீமானும் நாம் தமிழரும் உலா வருகிறார்கள். அம்பேத்கருக்கும் முதுராமலிங்கதிற்கும் மாலை அன்னிவிச்சு ஹிந்து பாசிஸ்டுகள் ரேஞ்சில் அம்பேத்கரை ஜாதி தலைவர் ஆக்கிவிட்டார் சீமான். இதற்கு சப்பை கட்டு கட்டும் முற்போக்காளர்கள் வேறு. அப்போ போய் காஞ்சி பெரியவாளுக்கும் மாலை சாத்துங்கோ என்ற எண்ணம் எழும் முன்பே மோடி புகழை திவ்யமாய் பாடும் சீமான். ஈழத்தில் இஸ்லாமியர்களை வதைத்தார்கள் விடுதலை புலிகள் இப்போ எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்ற முறையில் மோடி போலும். வறட்டு தமிழ் தேசியவாதம், ஜாதி சமரசம், கண்மூடி தனமான தொண்டர் கூட்டம் எல்லாம் சேர்த்து தமிழகத்தில் ஒரு பால் தக்கரே உருவாகிவிட்டார். வெளி மாநிலத்தவரை அடிக்காமல் இருப்பது தான் ஒரு குறை.
ரஜினி ரசிகர் போல் தலைவன் வேணும், வழி காட்டனும் என்று சொல்லாமல், சீமான் போன்ற அரசியல் சமூக சந்தர்பவாதிகள் பின் செல்லாமல் பெரியார் அம்பேத்கர் பாதையில் தனி மனித ஒழுக்கத்தினால் ஜாதியை ஒழித்து மதங்களை கடந்து தமிழராய் இல்லை மனிதனாய், உழைக்கும் மக்களாய் ஒன்று சேர்வோம்.

Neenga enna solla varinga , tamilan ippadi ninathu ninathu thaan nasama ponan … kerala or karnataka pakkam ponathu unda??.. periyar oru puratchi veeran athil veru karuthu yaarukkum illai , anal periyar pesinathu ellam vedha vakku illai , sila muttal thana karuthugalum ullathu.
என்ன சொல்றோம்ன்னுனா சீமானின் நாம் தமிழர் ஜாதி அமைப்பை ஒழிக்க போவதில்லை. முற்படுத்தப்பட்ட ஜாதிகளின் தயவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி சங்கம் தான் சீமானின் நாம் தமிழர். நான் தமிழ் நாட்டில் நடக்கும் ஜாதி கொடுமைகளை அறிவேன் இதற்காக கேரளா கர்நாடக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெரியார் சொன்னதில் முட்டாள் தனம் இருக்கும் என்றால் சீமான் சொல்வதில் முட்டாள் தனம் இருக்காதா? அல்லது சீமான் சொல்வது அனைத்தும் வேத வாக்கா?
Tamilnadu s n a worst state. Other state ppl slowly occuping our land and start businees here there are five lakh malayalees in coimbatore itself, chennai is filled by north indian labourers who settle their family here..V need many baltackers to save us. if seeman becomes one it is a good thing. do u remember tis incident , in an interview actor Jayaram made insulting comment on Tamil women Nam Tamilar hits his house and he apologised recently in kerela some journalist asked jayaram abt mullaiperiyar issue, suddently he touched his feet and said “leave me pls”. ipadi adika oru al vaenama