Posts Tagged ‘tamil marriage’

h1

கண்ணாடி வீடுகள்

March 17, 2010

“அம்மா …அவங்க யாருனே எனக்கு தெரியாது …நீ மட்டும் போயேன் ”, என முனகிய படியே படுக்கையை விட்டு இறங்கினாள் நளினி.

“பேசாம கிளம்பு …இப்படி விசேஷங்களுக்கு எல்லாம் போனா தான் …நம்ம வீட்லயும் பொண்ணு இருக்குனு நாலு பேருக்கு தெரியும் ”, என கேவலமான ஒரு விளக்கம் அளித்தாள் விசாலாட்சி .. சந்தேகமே வேண்டாம் நளினியின் தாயே தான் .

“இதெல்லாம் சரியே இல்லே மா …சீவி சிங்காரிச்ச மாட்ட சந்தைலே விலை பேசறா மாதிரி இருக்கு நீ சொல்றது ”, என அலுத்துக் கொண்டாள் நளினி.

“போயிட்டு தான் வாயேன் டி …சும்மா வீட்டுலே TV முன்னாடி உக்கார போறே”, என விசாலாட்சியின் கணவரும் குரல் எழுப்ப …இனி நம் சினுங்கல்கள் வேலைக்கு ஆகாது என முடிவு செய்தாள் நளினி.

“ஏதோ நல்ல reception சாப்பாடு உண்டு…அதுக்காக வேணும்னா போகலாம் ; அம்மாவின் கூச்சலுக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அந்த இன்னிசை மழை எவ்வளவோ பரவாயில்லை”, என வேறு வழி இல்லாமல் தன்னை தேற்றி கொண்டாள் நளினி. .

பன்னீர் மணம் வீச ரோஜா இதழ்களும் , கற்கண்டும் வரவேற்க திருமண மண்டபத்தினுள் நுழைந்தனர் .

விசாலாட்சியை கண்ட உடன் நாலைந்து பேர் ஓடோடி வந்தனர் .

“வருவியான்னு சந்தேகம் இருந்தது ..பரவாயில்லை கரெக்டா வந்துட்டே …இது யாரு நளினி தானே …பாத்து ஒரு 3 வருஷம் இருக்கும் …என்ன பண்றே மா ..”, என ஒரே மூச்சில் பேசி முடித்தாள் ஒரு அம்மையார். அம்மாவின் தோழி என சட்டென புரிந்து கொண்டாள் நளினி.

“நான் …” என விடை அளிக்க வாயை திறந்தாள் நளினி …அதற்குள் விசாலாட்சியும் அவர் தோழிகளும் நகை புடவை பற்றிய உரையாடலில் இறங்கி விட்டனர் . “அதுதான …அம்மாவின் தோழி ஆச்சே … நாம பேசறத எங்க கேக்க போறாங்க ; அமைதியா இருப்பது தான் சரி ”, என தீர்மானித்த படி சமையலறை பக்கம் திரும்பினாள் நளினி.

“ஏன்டி நல்ல வசதியான குடும்பம் தான ….ஏன் இப்படி ஒரு பொண்ண பாத்திருக்காங்க , தொட்டு கண்ணுல மை வச்சுக்கலாம் போல …”, விசாலாட்சியின் தோழிகளில் ஒருத்தி.

“மெதுவா பேசு டி …யாருக்காவது கேட்டுற போகுது …நல்ல வரதட்சனை கொடுத்திருப்பான் பொண்ணோட அப்பன் …அதுதான் இப்படி ஒரு பையன மடக்கி போட்டுட்டாங்க”…இது விசாலாட்சி .

“இந்த பொண்ண பாத்தா ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ சுஹாசினி மாதிரி இல்லே …?” என ஒருத்தி கேட்க… “சுஹாசினி கொஞ்சம் கலரா இருந்தான்னு நினைக்கறேன் ”, என்று இன்னொருத்தி குரல் எழுப்ப அந்த வட்ட மேசை மாநாட்டில் சிரிப்பொலி அடங்க நிமிடங்கள் 5 ஆகி இருக்கும் .

குளிர் பான பெட்டியின் இதமான காற்று நளினியின் மனப்புழுக்கத்தை இன்னும் தூண்டி விடுவது போல் இருந்தது . “அம்மா …ஏன் இப்படி ”…என பேச ஆரம்பித்த நளினியின் வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.

“கோடி கோடியா பணம் கொடுத்தாலும் இப்படி ஒரு கேவலமான பொண்ண என் பையனுக்கு …மாட்டவே மாட்டேன் ”, என நளினியின் தாய் சூளுரைத்தாள்.

“ஆமாம் கேக்க மறந்துட்டேன் …பையன் ஆஸ்திரேலியால இருக்கானே …அங்க ஏதோ நிற வெறி பிரச்சனை எல்லாம் ரொம்ப அதிகமாகி இருக்காமே …என்ன சொல்றான் ”, என ஒரு நலன் விரும்பி கேள்வி எழுப்பினாள்.

“அவன் இருக்கும் இடத்துல ஒன்னும் பிரச்சனை இல்லியாம் ….நான் கூட திரும்பி வந்துடுன்னு தான் சொல்றேன் …எங்க கேக்கறான் . அவனுக்கு அந்த lifestyle தான் பிடிச்சிருக்காம்.

News எல்லாம் பாக்கும் போது தான் வெளிநாடுகள்ல இருக்கற நிற வெறி பத்தி எல்லாம் தெரிய வருது …அப்படி என்ன வெறுப்போ நம்ம தோல பாத்தா …”, என அலுத்து கொண்டாள் விசாலாட்சி .

ஒரு நிமிடம் நளினி நடப்பது புரியாமல் திடுக்கிட்டு நின்றாள்.

வெட்கம் கலந்த புன்னகையுடன் மேடையில் நின்ற மணப்பெண்ணை பார்த்தாள். சில நிமிடங்களுக்கு முன் அவள் சரமாரியான நிற வெறி தாக்குதலுக்கு உள்ளானதை நினைத்தாள்…கொதித்தாள்…சட்டென எட்டி பார்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

h1

என்ன கொடுமை இது!!

August 24, 2009

ஜனநாயகம் பொங்கி வழியும் இந்த நாட்டில் ஒரு மனிதன் தனது சொந்த‌ விருப்பப்படி,தனது கொள்கையின் படி தனது திருமணத்தை நடத்திக்கொள்வதற்கு கூட உரிமை இல்லை.பர்ப்பன ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பலின் அடியாள் படையாக‌‌ இந்த நாட்டின் ஜனநாயக நிறுவணங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகின்றன.குறிப்பாக போலீசு கும்பல் இந்துவெறி பயங்கரவாத கும்பலின் சட்டப்பூர்வமான,ஒழுங்கமைக்கப்பட்ட ரவுடி கூட்டமாக மாறி வருகிறது. தருமபுரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எனும் புரட்சிகர அமைப்பின் தோழர்கள் பார்ப்பனிய சடங்கு முறைகளை மறுத்து ஒரு திருமணத்தையும்,ஏற்கெனவே பார்ப்பனிய முறைப்படி திருமணம் செய்து அதன் பிறகு அமைப்புக்கு அறிமுகமாகி தோழர்களான பிறகு தற்போது பார்ப்பன அடையளங்களை அகற்ற விரும்பிய‌ பெண் தோழர்கள் தமது தாலிகளை அறுக்கும் ஒரு விழாவிற்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்படு செய்திருந்தனர்.இந்த விழாவை தெருவில் நடத்துவதன் மூலம் பார்ப்பனிய சடங்கு முறைகளை புறகணித்த ஒரு புரட்சிகர மணவிழாவை மக்களுக்கு அறிமுகம் செய்ய தோழர்கள் திட்டமிட்டனர். இதற்காக மக்க‌ள் மத்தியில் விரிவாக பிரச்சாரம் செய்தார்கள்,திருமணத்திற்கு அனைவரையும் அழைத்திருந்தனர். தமது முச்சையே நிறுத்தும் வேலைகளை செய்தால் பார்ப்பன‌ பாசிச‌ வெறி நாய்கள் சும்மா இருக்குமா ? தனது அடியாள் படையான போலீசை ஏவி விட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பு.ஜ.தொ.மு ஒசூர் பகுதி அமைப்பாளர் தோழர் பரசுராமனையும் தோழரின் துனைவியாரையும் கைது செய்துள்ளது. பார்ப்பன பயங்கவாத பாசிச கும்பலை அடியோடு ஒழித்துக்கட்டாவிட்டால் அனைத்து ஜனநாயக உரிமைகளும் புதைக்கப்படும். இது மாபெரும் ஜனநாயக நாடு என்று புளங்காகிதமடைபவர்கள் இதற்கு என்ன விளக்கமளிப்பார்கள்? எதற்கும் வாயை திறக்காத ஒரு வர்க்கம் இருக்கிறது, அவர்கள் இனி மேலும் கண்களையும்,வாயையும் திறக்காவிட்டால் நாளை தனது பிரச்சனைகளை,தனது விருப்பப்படி,தனது வயால் கூட‌ புலம்ப முடியாதபடி இந்திய‌ ஜனநாயகம் மேலும் பல மடங்கு அதிகமாகியிருக்கும் !

News article

News article

நன்றி : Superlinks