Archive for the ‘kumural’ Category

h1

The Fight is on….

May 19, 2009

eelam

h1

Periyar

April 7, 2009
Poem on Periyar
h1

Kumural – 2

February 22, 2009

“கருணையே வடிவானாவன், அவன் கருணாமுர்த்தி;
கொடியவரையும் மன்னித்து வாழவைப்பான் திருத்தி”, என
ஆண்டவன் துதிபாடியது ஒரு கோஷ்ட்டி.
“ஞாபகமறதி கொஞ்சம் அதிகம் தான் உங்கள் ஆண்டவனுக்கு;
கொடுங்கோலர்களையும் கேடு விளைவிக்கும் அரசியல்வாதிகளையும்
ஆனந்தமாய் கூத்தடிக்க அனுமதித்து
அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற கேள்விக்கடலில் தத்தளிக்கும் மக்களை,
சுனாமி, எரிமலை, சூறாவளி போன்ற கொடிய மிருகங்களால் சோதிக்கிறானே
வயதாகி விட்டது போலும்”, என்றேன்.

கோஷ்ட்டியில் ஒருவன் பெருமிதத்துடன்,
“போன பிறப்பில் செய்த பிழைகள், அதுதான் இந்த
பிறப்பில் அனுபவிக்கின்றனர்”, என்றான்.

அட அது சரி;
“அரசியலையும் சாதியையும் ஆயுதமாய் பயன்படுத்தும்
மனித திமிங்கலஙள் சென்ற பிறப்பில் செய்த புண்ணியங்களின்
பலனே இந்த பணமும், வசதியும்;
உன் கோமணம் உற்பட உறுவி உன்னை துயரத்தின் எல்லைக்குத் தள்ளுவான்,
வாயை திறக்காதே; கவலை படாதே;
அட இந்த பிறப்பில் தவித்தால் என்ன,
உன் ஆண்டவனின் விதிமுறைப்படி
அடுத்த பிறப்பில் சுகமாய் வாழ்வாய்…பொறுத்திரு”
ஆள விடுங்கடா சாமி..

h1

kumural – 1

February 15, 2009

கரியின்றி விறகின்றி சமையல் செய்ய தார் ரோட்டினை
தயார் செய்து கொண்டிருந்தது வெயில்;

குறைந்தபட்சம் இருவரின் செவிபறையையாவது
கிழித்தாக வேண்டும் என சபதம் எடுத்தாற்போல்
அலறிக்கொண்டிருந்தது ஒலிப்பெருக்கி;

“பன்னிரெண்டு மணிக்கு இருப்பேன் எனக் கூறிவிட்டு மூன்று மணியாகியும்
மகனின் பள்ளி கலைவிழாவிற்க்கு போகமுடியவில்லையே”, என நினைத்து தவித்தான் குமார்.

“சிகிச்சைக்கு பணத்துடன் நான் இங்கு இருக்க, தீராத வலியில் அம்மா அங்கு தவிக்கிறாளே”,
என அமைதியாய் குமுறினாள் மல்லிகா.

இன்னும் பல மல்லிகாக்களும் குமார்களும் அந்தக் கூட்டத்தில் கலங்கிக்கொண்டிருக்க,
வீதியில் முத்துப்பல்லக்கில் காட்சி அளித்தார் எம்பெருமான்!!

“பொதுமக்களை சோதனைக்குள்ளாக்கி காட்சி அளிக்கவேண்டும் என யார் அழுதார்”, என்று
யாரோ புலம்ப,

கூட்டதில் ஒரு பக்திப்பழம்,”சோதித்த பின் நன்மைகளை வாரி இறைப்பதே
அவன் திருவிளையாடல்”, என்றது பெருமிதத்துடன்;
விசாரித்து பார்த்ததில் ஆண்டவின் ஒலிம்பிக் பயிற்சியாளன் எனப் பேசிக்கொண்டனர்.

என்ன விசித்திரமான ஊரடா இது
மாணாக்கன் வளர வேண்டும் என்ற ஆசையில் திட்டும் ஆசிரியனையும்
திருந்தி வாழ அதட்டும் பெற்றோர்களையும்
கொடுங்கோலர்கள் எனத் தூற்றும் அதே வேளையில்
வீதி உலா வரும் கற்ச்சிலையை, கருணாமூர்த்தி என்றும்
இன்னல் தீர்க்கும் இறைவன் என்றும் துதிபாடுகின்றனர்
இந்த இருபத்தோறாம் நூற்றண்டின் மாக்கள்!!